» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை-சென்னை வந்தே பாரத்' ரயிலில் 539 பேர் பயணம்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 12:00:05 PM (IST)
நெல்லை-சென்னை இடையே இயக்கப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயிலில் நேற்று 539 பயணிகள் பயணம் செய்தனர்.
நெல்லை-சென்னை இடையே 'வந்தே பாரத்' ரயிலை கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரயில்வே கால அட்டவணைப்படி நெல்லையில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு சென்னைக்கு 'வந்தே பாரத்' ரயில் தனது பயணத்தை முதல் முறையாக தொடங்கியது.
இந்த ரயிலில் எக்சிகியூட்டிவ் பெட்டியில் 24 பயணிகளும், சாதாரண ஏசி பெட்டிகளில் 252 பயணிகளும் நெல்லையில் இருந்து பயணித்தனர். இதேபோல் மதுரையில் இருந்து எக்சிகியூட்டிவ் பெட்டியில் 10 பேரும், சாதாரண ஏசி பெட்டியில் 97 பேரும் சென்னைக்கு புறப்பட்டனர்.
முதல் நாளான நேற்று மொத்தமாக எக்சிகியூட்டிவ் பெட்டியில் 52 பேரும், சாதாரண ஏசி பெட்டியில் 487 பேரும் என மொத்தம் 539 பேருடன் 'வந்தே பாரத்' ரயில் சென்னைக்கு மதியம் 1.54 மணிக்கு சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து மறுமார்க்கமாக நேற்று மதியம் 2.50 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லைக்கு இரவு 10.40 மணிக்கு வந்தடைந்தது. இதில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.
இதற்கிடையே இரவு 10.40 மணிக்கு இந்த ரயில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை அடைவதால் நெல்லை மாவட்டம் திசையன்விளை, ராதாபுரம், வள்ளியூர், அம்பை, சேரன்மாதேவி, தென்காசி மாவட்டம் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், தென்காசி உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி என்.டி.பி.எல். ஊழியர்கள் 23வது நாளாக ஸ்ட்ரைக் : மின் உற்பத்தி முற்றிலும் பாதிப்பு
வெள்ளி 9, மே 2025 11:25:02 AM (IST)

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)

ரெட்ரோ படத்தின் வெற்றிவிழா : அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி வழங்கிய சூர்யா!
வியாழன் 8, மே 2025 11:54:49 AM (IST)
