» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சனாதனத்தை ஒருபோதும் ஒழிக்க முடியாது : ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

வியாழன் 28, செப்டம்பர் 2023 11:31:57 AM (IST)



சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசுபவர்கள் நாட்டை சிதைக்க பார்க்கிறார்கள்' என சென்னையில் நடந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

சென்னை அண்ணாநகரில் உள்ள பலிமார் மடத்தில் உடுப்பி ஸ்ரீவித்யாதீச தீர்த்த சுவாமிகளின் 45-வது சாதுர்மாஸ்ய விரதத்தின் நிறைவு விழா நேற்று நடந்தது. 'சனாதன உற்சவம்' என்ற தலைப்பில் நடந்த இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மடத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

விழாவில் அவர் பேசியதாவது: நமது நாட்டில் ஆன்மிகவாதிகள் சென்ற இடமெல்லாம் புண்ணிய பூமியாக மாறியுள்ளது. சனாதன தர்மம் நிலைத்து நிற்க ரிஷிகள், முனிவர்கள் போன்றோரின் பங்களிப்பு மிக அதிகமாக இருந்துள்ளது. சனாதனத்தின் அடிப்படை அத்தியாயம் நம் வேதங்களில் உள்ளது, ரிஷிகள், முனிவர்கள் வாழ்வியல் தத்துவத்தை அடிப்படையாக கொண்டு நமக்கு அதனை தந்துள்ளனர்.

பாரதம் உருவானதே சனாதன தர்மத்தில்தான். சனாதனத்தில் எல்லாம் உள்ளது. மரத்தின் அடிவேர் போல் இருப்பது சனாதனம். இலை இல்லாமல் கிளை இல்லாமல் மரம் வாழலாம். ஆனால் வேர் இல்லாமல் மரம் வாழ முடியாது. அந்தளவுக்கு சனாதன தர்மம் வாழ்வியலில் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. சனாதன தர்மத்தின் மிகவும் முக்கியமான பகுதியாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான இடங்கள் சனாதனம் தர்மத்தின் சான்றுகளாக இருக்கின்றன.

எனவே, சனாதனத்தை ஒருபோதும் ஒழிக்க முடியாது. அது, மண்ணோடும், மக்களோடும் நெருக்கமாக உள்ளது. யாரெல்லாம் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசுகிறார்களோ அவர்கள் இந்த நாட்டை சிதைக்க பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மை. எனவே, நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory