» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குருவானவரை மாற்றக் கோரி சபை மக்கள் 2வது நாளாக போராட்டம்: தூத்துக்குடியில் பரபரப்பு
வியாழன் 28, செப்டம்பர் 2023 8:21:32 AM (IST)

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் சி.எஸ்.ஐ., ஆலயத்தில் குருவானவரை மாற்றக் கோரி சபை மக்கள் 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் வட்டகோவிலில் சுமார் 450 குடும்பத்தினர் அங்கம் வகித்து வரும் தூத்துக்குடியின் மிக முக்கிய திருச்சபையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆலயத்தின் குருவானவராக ஜெபக்குமார் ஜாலி என்பவர் கடந்த ஜூன் மாதம் பதவியேற்றுள்ளார் இந்த நிலையில் அவர் வந்ததிலிருந்து சபைக்குள் பிரிவினையை ஏற்படுத்தி இருதரப்பினராக செயல்படவும் இதில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் உறுப்பினர் 3 பேர் தகுதி இழப்பு ஏற்பட்டதால் அவர்களின் 3 பேரை திருமண்டல மாடுரேட்டர் கமிஷனரி யாரிடமும் ஒப்புதல் பெறாமல் தானாக தன்னிச்சையாக வட்ட கோவிலுக்கு சம்பந்தமில்லாத நபரை திருமண்டல செயற்குழு உறுப்பினராக நியமித்ததாகவும் இதனை வட்ட கோவிலில் செயலாளர் பீட்டர் என்பவர் நியாயம் கேட்க சேகரத் தலைவர் ஜெபக்குமார்ஜாலி இடம் கேட்க சென்ற போது அவரது வீட்டில் இருந்த அவரது மாமனார் சேகர செயலாளர் பீட்டரை செருப்பை காட்டி அடிக்க வந்ததாகவும்,
இதனால் சபை மக்கள் ஒன்று சேர்ந்து நாங்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ள செயலாளர் பீட்டரை எப்படி நீங்கள் செருப்பை வைத்து அடிக்க வரலாம் என கூறி நியாயம் கேட்டதாகவும் ஆனால் சேகரத் தலைவர் குருவானவர் ஜெபக்குமார் ஜாலி அப்படித்தான் செய்வேன் என அராஜகமாக பேசியதாகவும் இதனால் தங்களது சபைக்கு இந்த குருவானவர் தேவையில்லை இவரை உடனே மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு சமாதான கூட்டங்களையும் ஏற்பாடு செய்து இரு தரப்பினரையும் பேசி சமாதானமாக செல்ல அறிவுறுத்தியுள்ளனர் ஆனால் குருவானவர் தரப்பினர் எவ்வித சமாதானத்துக்கும் வர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டலம் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் எபினேசர் ஆலயம் எனும் வட்டக்கோவில் ஆலய சபை மக்களின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் நேற்று இரவு (27.9.23) முதல் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் எபினேசர் ஆலயம் எனும் வட்ட கோவிலில் சபை மக்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளனர்

கோவில் வளாகத்திற்கு வெளியே உண்ணாவிரதம் இருக்க காவல்துறை அனுமதி மறுத்ததால் கோவில் உள்ளேயே கிறிஸ்தவ பாடல்கள் பாடி பிரார்த்தனைகள் ஏறெடுத்து கொண்டு உள்ளிருப்பு உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர் இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
ஒரு நாள்Sep 29, 2023 - 04:02:19 PM | Posted IP 172.7*****
கூட தாங்காது. மக்கள் உணவுக்கு பழகி விட்டனர்
Voice of RevivalSep 29, 2023 - 12:09:54 AM | Posted IP 172.7*****
போதகர் சபையாரை கண்டித்தது அந்தக் காலம். சபையார் போதகரை கண்டிப்பது இந்தக் காலம். ஏனென்றால் இது கடைசி காலம்.
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி என்.டி.பி.எல். ஊழியர்கள் 23வது நாளாக ஸ்ட்ரைக் : மின் உற்பத்தி முற்றிலும் பாதிப்பு
வெள்ளி 9, மே 2025 11:25:02 AM (IST)

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)

ரெட்ரோ படத்தின் வெற்றிவிழா : அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி வழங்கிய சூர்யா!
வியாழன் 8, மே 2025 11:54:49 AM (IST)

A.ThangarajaSep 29, 2023 - 09:59:06 PM | Posted IP 172.7*****