» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மீன் லோடு வேன் - கேஸ் லாரி மோதி விபத்து ஒருவர் பலி- 5பேர் படுகாயம்!

புதன் 27, செப்டம்பர் 2023 5:06:06 PM (IST)

வல்லநாடு அருகே மீன் லோடு ஏற்றி வந்த வேனும், தனியார் கேஸ் டேங்கர் லாரியும் மோதி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 

நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் செல்வராஜ் (60). இவரும், நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை ராசா சேவியர் மகன் மில்டன் (36), ஆரோக்கிய ரூபன் (29), முக்கூடல் இலந்தைகுளம் லூர்து மகன் வர்கீஸ் (37), திருவேங்கடநாதபுரம் பாலாஜி நகர் பெருமாள் மகன் சந்திரன் (32), மாரியப்பன் மகன் பெரிய துரை (27) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடிக்கு சென்றனர். 

அங்கு மீன்களை ஏற்றிக் கொண்டு லாரியில் நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வேனை டிரைவர் மில்டன் ஓட்டி சென்றார். நேற்று அதிகாலை 1 மணி அளவில் நெல்லை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலை வல்லநாடு துப்பாக்கி சுடுதளம் தாண்டி முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் கேஸ் லாரியை வேன் முந்தி சென்றுள்ளது. உடனே இடது புறமாக வேனை டிரைவர் திருப்பி உள்ளார். இதனால் டேங்கர் லாரியின் முன்புறத்தில் வேன் மோதி விபத்துக்குள்ளானது. 

கண்இமைக்கும் நேரத்தில் சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் இருந்த ஆரோக்கிய ரூபன், மில்டன், வர்கீஸ், சந்திரன், பெரிய துரை ஆகிய 5 பேரும் படுகாயத்துடன் ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடந்தனர். மேலும் வேனில் இருந்த மீன்கள் சாலையில் சிதறி கடந்தன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்து முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வராஜ் உடலை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயங்களுடன் கிடந்த மற்ற 5 பேரையும் போலீசார் பாதுகாப்பாக மீட்டு அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கேஸ் டேங்கர் லாரி டிரைவர் புதுக்கோட்டை கீரனூர் சின்னையா மகன் சண்முகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory