» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை: ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

திங்கள் 18, செப்டம்பர் 2023 3:32:13 PM (IST)

அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பெரியார், அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்டோர் குறித்து அண்ணாமலை விமரிசித்திருந்ததால் அதிமுக - பாஜக இடையே மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில், கூட்டணி இல்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: அண்ணாமலை தர்மத்தை மீறி செயல்படுகிறார். அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை.  பாஜகவுடான கூட்டணி குறித்து தேர்தல் வரும்போது முடிவு செய்யப்படும். 

இதுதான் எங்கள் நிலைப்பாடு. எங்களை விமரிசிக்கும் பாஜகவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும். பாஜக தேசிய தலைமை சொல்லியே அண்ணாமலை இவ்வாறு பேசுகிறார். அண்ணாமலை குறித்து அதிமுக தொண்டர்கள் இனி விமரிசிப்போம். பாஜகவுக்கு காலே இல்லை. எப்படி தமிழகத்தில் காலூன்ற முடியும்.தனித்துப் போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழ்தான் அண்ணாமலை வாக்கு வாங்குவார் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.மக்கள் கருத்து

TamilanSep 18, 2023 - 06:16:07 PM | Posted IP 162.1*****

Annan Jeyakumar avargal kala nilavaram theriyamal pesugirar.....

THONDARKALSep 18, 2023 - 03:57:15 PM | Posted IP 172.7*****

நீங்கள் திமுகவுடன் சேர்ந்து விடலாம்? பிஜேபி சுலபமாக ஜெயித்து விடுவார்கள்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory