» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகர் ரஜினிகாந்த் கோவை வருகை: விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்கள் கூட்டம்!

ஞாயிறு 17, செப்டம்பர் 2023 7:23:55 PM (IST)



சூலூரில் நடைபெறும் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்த நடிகர் ரஜினிகாந்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

நடிகர் ரஜினி காந்த் சூலூரில் நடைபெற உள்ள தனது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மனைவி லதாவுடன் கோவை வந்தடைந்தார். நடிகர் ரஜினிகாந்த் வருவதை அறிந்த அவரது ரசிகர்கள் விமான நிலையம் முன்பாக கூடியிருந்தனர். சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு சரியாக 11.30 மணிக்கு வெளியே வந்த அவரை, ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நடிகர் ரஜினி காந்த் பதிலளிக்க தயாரான நிலையில், கூட்ட நெரிசலால் அவரால் சரிவர பதிலளிக்க முடியவில்லை. ஓரிரு வார்த்தைகளாக தனது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவை வந்துள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார்.  இதனையடுத்து காரின் மேல் நின்றவாறு ரசிகர்களுக்கு கையசைத்து அங்கிருந்து விடை பெற்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory