» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொள்ளையடிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை : தமிழாசிரியர் முன்னணி கோரிக்கை!

வெள்ளி 2, ஜூன் 2023 5:44:28 PM (IST)

தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் கை வைக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழாசிரியர் முன்னணி பொறுப்பாளர் ஈ.சங்கர நாராயணன் வெளியிட்ட அறிக்கையில் "திருநெல்வேலி மாவட்டம், நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில், மாணவர்கள் கட்டிய பணத்திற்குப் பற்றுமுறி (ரசீது) கேட்டனர். அதற்கு அப்போதைய தலைமை ஆசிரியர், "ரசீது கேட்டால் காண்டக்ல கை வைத்துவிடுவேன், பிராக்டிக்கல் மார்க்கில் கை வைத்துவிடுவேன் என்று மிரட்டினார்".

ரசீது கேட்ட மாணவர்கள் சிலரின் பெற்றோர்களை வரவைத்து, "சில ஆசிரியர்கள் தூண்டலால் ரசீது கேட்கிறார்கள்" என்று அறியாத அவர்களிடம் கூறினார். நம் பிள்ளைக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற பெற்றோர்களின் , அறியாமை எண்ணத்தைப் பயன்படுத்திக் கொண்டார். கொஞ்சம் விவரம் தெரிந்தவர்களாக இருந்திருந்தால், மற்றதெல்லாம் எங்களுக்குத் தேவை இல்லை; ரசீது ஏன் தரமறுக்கிறீர்கள்? என்று கேட்டு உயர் அலுவலர்களுக்குத் தெரிவித்திருப்பார்கள்; அவர் நடத்தைக்குத் தண்டனை கிடைத்திருக்கும்.

தமிழ்நாட்டின் ஒரு பள்ளியிலும், ஒரு பெற்றோரும் ஒரு புகாரும் கொடுக்கமாட்டார்கள். என்ற துணிச்சலில்தான் ஆண்டாண்டு காலமாக, ஆகப் பெரும்பான்மையான தலைமை ஆசிரியர்கள் துணிந்து கொள்ளை அடிக்கின்றனர். முறையீடு செய்ய இயலாத விளிம்பு நிலைப் பெற்றோர்களின் குரலாகத் தமிழாசிரியர் முன்னணி ஒலிக்கிறது. இதுபோன்று அரம்பத்தனத்திற்கு முடிவு கட்டவேண்டும். தமிழக அரசும், கல்வித்துறையும், கையூட்டு ஒழிப்புத் துறையும் தன்முனைப்பு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து

kollaiJun 2, 2023 - 06:53:23 PM | Posted IP 172.7*****

adichu kottaya katta porar... evlo fee vangnar sollunga... etha use panna than vangi iruppar..

RajamohamedJun 2, 2023 - 06:18:46 PM | Posted IP 117.2*****

நடவடிக்கை எடுக்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory