» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளியில் நுழைந்து ஆசிரியரை தாக்கிய வழக்கில் மேலும் ஒரு பெண் கைது!

வியாழன் 23, மார்ச் 2023 3:22:22 PM (IST)

எட்டையாபுரம் அருகே பள்ளிகூடத்திற்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய வழக்கில் மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே கீழநம்பிபுரம் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜசிங்கம் மகன் பாரத் (38) என்பவர் கடந்த 20ம் தேதி அப்பள்ளியில் பயிலும் 2ம் வகுப்பு மாணவனை தாக்கியதாக அம்மாணவனின் பெற்றோரான ஓட்டப்பிடாரம் தெற்கு கல்மேடு பகுதியைச் சேர்ந்த தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வரும் மாணவனின் தந்தையான முனியசாமி மகன் சிவலிங்கம் (34), சிவலிங்கம் மனைவி செல்வி (28) மற்றும் மாணவனின் தாத்தா முனியசாமி (53), பாட்டி மாரிச்செல்வி (43) ஆகியோர் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியர் பாரத்தை தவறாக பேசி பள்ளி வளாகத்திற்குள் அவரை தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர் பாரத் எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தாெடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியரை தாக்கிய சிவலிங்கம், செல்வி மற்றும் முனியசாமி ஆகியோர் 3 பேரையும் சம்பவம் நடந்த அன்றே அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட மேற்படி மாணவனின் பாட்டியான முனியசாமி மனைவி மாரிச்செல்வி (43) என்பவரை இன்று கைது செய்தனர். இதுகுறித்து எட்டையாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து

STUDENTSMar 23, 2023 - 03:50:10 PM | Posted IP 162.1*****

மாதா பிதா குரு ....கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் நிலைமை ....விடியல்தான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory