» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தாயை கார் ஏற்றிக் கொலை செய்த மகன் கைது
புதன் 22, மார்ச் 2023 5:14:00 PM (IST)
நெல்லையில் தாயை கார் ஏற்றிக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா அச்சன்புதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சங்கரநாராயணன் மனைவி முருகம்மாள் (65). இவர்களது மகன்கள் சங்கர் என்ற மோகன் (45), ராம்குமார், உதயமூர்த்தி (38). சங்கரநாராயணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இலத்தூர் விலக்கு பகுதியில் நடந்த ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இதுதொடர்பான வாகன விபத்து நஷ்ட ஈடு கோரும் வழக்கு நெல்லை கோர்ட்டில் நடந்து வருகிறது. அந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராவதற்காக கடந்த 3-ந் தேதி முருகம்மாள், தனது இளைய மகன் உதயமூர்த்தியுடன் மோட்டார் சைக்கிளில் தென்காசிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர்களின் பின்னால் காரில் சங்கர் வந்தார். அவர் திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது தனது காரை ஏற்றினார்.
இந்த சம்பவத்தில் முருகம்மாள் பலியானார். உதயமூர்த்தி படுகாயம் அடைந்தார். இந்த கொலை தொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை தேடி வந்தனர். மேலும் தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் நாகசங்கர், இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இலத்தூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் போது, சங்கரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 12, மே 2025 5:33:36 PM (IST)

தமிழகத்தில் மே 14, 15ல் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
திங்கள் 12, மே 2025 4:57:09 PM (IST)

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.எஸ். தங்கபாண்டியன் மறைவு: அமைச்சர் அஞ்சலி!
திங்கள் 12, மே 2025 3:31:32 PM (IST)

பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு : மாநில தலைவர் வலியுறுத்தல்
திங்கள் 12, மே 2025 12:50:38 PM (IST)

கள்ளழகர் திருவிழாவில் புனிதமான பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம் : ஆளுநர் ரவி வாழ்த்து!
திங்கள் 12, மே 2025 12:34:52 PM (IST)

பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திங்கள் 12, மே 2025 10:27:28 AM (IST)

சங்கர்Mar 22, 2023 - 06:37:35 PM | Posted IP 162.1*****