» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பைக் விபத்தில் ஷிப்பிங் நிறுவன மேலாளர் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்
புதன் 22, மார்ச் 2023 4:53:20 PM (IST)
தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயம் அடைந்த ஷிப்பிங் கம்பெனி மேலாளர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தூத்துக்குடி மட்டக்கடை வாடி தெருவைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் மகன் சுப்பிரமணியன் (55). இவர் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் உள்ள ஒரு ஷிப்பிங் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். கடந்த 17ஆம் தேதி வேலை முடிந்து மாலை 6 மணி அளவில் தனது வீட்டுக்கு மோட்டார் பைக்கில் பீச் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே பைக் இவரது பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிக்கைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
பைக் ரேசர்கள் அட்டகாசம்
ஒரே பைக்கில் 3பேர் பயணித்து மிகவும் வேகமாக சென்றதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் தினமும் பைக் ரேஸ் நடைபெறுகிறது. இதனால் பல விபத்துக்கள் ஏற்படுவதாக அந்த பகுதியில் நடந்து செல்வோர் தெரிவிக்கிறார்கள். இந்த பகுதியில் தான் தினமும் 1000க்கும் மேற்பட்ட ஷிப்பிங் ஊழியர்கள் இருசக்கர வாகனங்களில் பயணிக்கிறார்கள். அந்த பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தி ஆய்வு செய்தால் விபத்துக்கள் தவிர்க்கப்படலாம் என்றும் ஷிப்பிங் ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள்.
மக்கள் கருத்து
ராஜாMar 22, 2023 - 08:25:49 PM | Posted IP 162.1*****
நம்ம ஊர்ல இருக்குற ரோட்டுக்கு மணிக்கு இருநூறு கிலோமீட்டர் போகுற மாதிரி பைக்லாம் தேவையா? அந்த மாதிரி பைக்லாம் சிட்டிக்குள்ள ஓட்டவே கூடாது? அந்த மாதிரி பைக் எல்லாத்தையும் கவர்மெண்ட் தடை செய்யனும். எவ்வளவு தான் திருக்குனாலும் 50 கிலோ மீட்டருக்கு மேல போகாத பைக்கால் விபத்துக்களை தடுக்கலாம்.
அங்குMar 22, 2023 - 07:41:24 PM | Posted IP 162.1*****
திருட்டு புல்லிங்கோக்கள், பைக் பயித்தியங்கள் எல்லாம் அங்கு சுத்திட்டே இருக்கும் . பிடித்து பைக்கை பறிமுதல் பண்ணுங்க .
தமிழன்Mar 22, 2023 - 07:10:43 PM | Posted IP 162.1*****
இப்போதெல்லாம் பதினைந்து வயதில் இருந்து இருபது வயது வரை உள்ள நிறைய இளைஞர்களால் நிறைய விபத்துகள் நடக்கிறது .காவல் துறை இவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் .தூத்துக்குடி கடற்கரை சாலையில் பொதுமக்கள் செல்ல முடியவில்லை .
நமது ஊர்Mar 22, 2023 - 06:22:42 PM | Posted IP 162.1*****
நமது நகரில் உள்ள ஒரு வழி பாதைகளில் இரு மற்றும் நான்குசக்கர வாகனங்கள் அதிவேகமாக வருவதைக் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தொடரும் செய்திகள்

லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 12, மே 2025 5:33:36 PM (IST)

தமிழகத்தில் மே 14, 15ல் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
திங்கள் 12, மே 2025 4:57:09 PM (IST)

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.எஸ். தங்கபாண்டியன் மறைவு: அமைச்சர் அஞ்சலி!
திங்கள் 12, மே 2025 3:31:32 PM (IST)

பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு : மாநில தலைவர் வலியுறுத்தல்
திங்கள் 12, மே 2025 12:50:38 PM (IST)

கள்ளழகர் திருவிழாவில் புனிதமான பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம் : ஆளுநர் ரவி வாழ்த்து!
திங்கள் 12, மே 2025 12:34:52 PM (IST)

பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திங்கள் 12, மே 2025 10:27:28 AM (IST)

thoothukudiMar 23, 2023 - 05:13:32 PM | Posted IP 162.1*****