» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளி வளாகத்தில் ஆசிரியையை தாக்கிய ராணுவ வீரர் மீது வழக்குப் பதிவு!
புதன் 22, மார்ச் 2023 4:30:56 PM (IST)
நெல்லை மேலப்பாளையத்தில் பள்ளி வளாகத்தில் ஆசிரியையை தாக்கிய ராணுவீரர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த ஆனந்த மெர்லின்(48) என்பவர் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் மெர்லினுக்கு செல்போன் செயலி மூலமாக விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த ராணுவ வீரரான அந்தோணி தாஸ்(45) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அடிக்கடி 2 பேரும் நேரில் சந்தித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அவரிடம் இருந்து கடனாக ரூ.20 லட்சம் வரை ஆனந்த மெர்லின் பெற்றுக்கொண்டதாகவும், அதனை தற்போது திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் சமீபத்தில் அந்தோணி தாஸ் பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்தோணி தாஸ் மருத்துவ விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அவர் நேற்று நெல்லைக்கு வந்து கடன் தொகையை திருப்பி கேட்பதற்காக ஆனந்த மெர்லின் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் இல்லை. இதனால் அவரை தேடி கருங்குளம் பள்ளிக்கு நேரில் சென்றுள்ளார். அப்போது கடன் தொகையை அந்தோணி தாஸ் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்தோணி தாஸ் ஆத்திரம் அடைந்து பள்ளி வளாகத்தில் வைத்து ஆனந்த மெர்லினை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மெர்லின் மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். கடனாக வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிட்டதாகவும், ஆனால் அவர் தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த நிலையில் இன்று பள்ளியில் வைத்து தாக்கியதாகவும் கூறி புகார் மனு அளித்தார். இதையடுத்து அவரது புகாரின்பேரில் இந்திய தண்டனை சட்டம் 294(பி), 323, 506(1) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அந்தோணி தாசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் விற்பனை கண்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
சனி 13, டிசம்பர் 2025 3:13:37 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

ஓபிஎஸ் தலைமையில் டிச.15ல் நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
சனி 13, டிசம்பர் 2025 11:52:30 AM (IST)


.gif)