» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மகளிர் உரிமைத் தொகை குறித்து அவதூறு கருத்து : பாஜக நிர்வாகி கைது!

புதன் 22, மார்ச் 2023 4:21:32 PM (IST)

குடும்ப தலைவிக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை குறித்து சமூக வலைதளத்தில் தவறான கருத்து பதிவிட்டதாக பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டபேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் நிதி அமைச்சர். குடும்ப தலைவிக்கு உரிமைத் தொகையாக ரூ.1000 செப்டம்பர் மாதம் 15இல் வழங்ககப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த உரிமைத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் குறித்து சாத்தான்குளம் ஒன்றிய பாஜக பொதுச்செயலர் ஜெ. ஜெயராஜேஷ் (எ) ராஜேஷ் (50). சமுக வலைதளமான டிவிட்டரில் ஒன்றிய பாஜக பெயரில் உள்ள குழு மூலம் இத் திட்டம் குறித்தும் அவதூறாக தவறான பதிவு செய்ததாக கூறப்படுகிறது. 

இதற்கு அதில் பதிவில் பலர் தவறான பதிவு என குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அதற்கு ராஜேஷ், அவதூறாகவும் பெண்மை குறித்தும் இழிவாக பதிவிட்டிருந்தாக தெரிகிறது. . இதுகுறித்து சைபர் கிரைம் பிராஞ்ச் போலீசாருக்கு கண்டறிந்து நடவடிக்கை எடுகக்க வலியுறுத்தியுள்ளழர். மேலும் . இதனையறிந்த சாத்தான்குளம் மாவட்ட திமுக பிரதிநிதி லெ. சரவணன் (50) சாத்தான்குளம் காவல் நிலையத்திலும் புகார் செய்தார்.

அதன்பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ஜாண்சன், ராஜேஷ் மீது 3பிரிவுகளில் வழக்குபதிவு செய்தார். காவல் ஆய்வாளர் முத்து, டிஎஸ்பி அருள் ஆகியோர் விசாரணை நடத்தி, ராஜேஷை கைது செய்தனர். இதனையறிந்த மாவட்ட பாஜக தலைவர் ஆர். சித்ராங்கதன், மாவட்ட துணைத் தலைவர் எஸ். செல்வராஜ், நகர தலைவர் ஜோசப், மாநில பாஜக இளைஞரணி செயலர் பூபதிபாண்டியன், உள்ளிட்ட பாஜகவினர் பலர் வந்து எதிர்ப்பு தெரிவித்து போலீசிடம் வாக்கு வாதம் செய்தனர். 

அப்போது மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், பாரத பிரதமர் நரேந்திரமோடி குறித்து சமூக வலை தளத்தில் அவதூறாக விமர்சனம் செய்தாக கடந்த 6 மாதத்துக்கு முன்பு தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அப்புகாருக்கு இதுவரை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறினார். இதற்கிடையே கைது செய்யப்பட்ட ராஜேஷ்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று நெல்லை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory