» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்தார் - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
புதன் 22, மார்ச் 2023 3:59:35 PM (IST)

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15 ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான கரோனா தொற்றுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
கரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் ,செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது என தகவல் வெளியானது .இந்த நிலையில் தற்போதைய மருத்துவ பரிசோதனையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கோவிட் நெகட்டிவ் என வந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்ததாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 12, மே 2025 5:33:36 PM (IST)

தமிழகத்தில் மே 14, 15ல் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
திங்கள் 12, மே 2025 4:57:09 PM (IST)

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.எஸ். தங்கபாண்டியன் மறைவு: அமைச்சர் அஞ்சலி!
திங்கள் 12, மே 2025 3:31:32 PM (IST)

பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு : மாநில தலைவர் வலியுறுத்தல்
திங்கள் 12, மே 2025 12:50:38 PM (IST)

கள்ளழகர் திருவிழாவில் புனிதமான பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம் : ஆளுநர் ரவி வாழ்த்து!
திங்கள் 12, மே 2025 12:34:52 PM (IST)

பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திங்கள் 12, மே 2025 10:27:28 AM (IST)
