» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டில் உள்ள 922 கூட்டுறவு வங்கிகளிலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அறிமுகம்

புதன் 22, மார்ச் 2023 12:15:54 PM (IST)

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அனைத்து தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கூட்டுறவு துறையில் கடந்த ஓராண்டாக எடுத்த தொடர் முயற்சிகளின் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள தலைமை கூட்டுறவு வங்கி, அதன் 54 கிளைகள் மற்றும் அனைத்து 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், அதன் 922 கிளைகள் அனைத்திலும் ஐ.எம்.பி.எஸ்.(உடனடி பணம் பரிமாற்றம்) கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அனைத்து தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இரண்டு வாரங்களில் இவை அனைத்திலும் யு.பி.ஐ. வசதியும் கொண்டு வரப்படுகிறது. இதன்மூலம் கூகுள் பே, பே.டி.எம்., பி.எச்.ஐ.எம். உள்ளிட்ட அனைத்து பண மற்ற பரிவர்த்தனை வசதிகளும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory