» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாடு சாரண, சாரணிய இயக்க போட்டிகளில் தூத்துக்குடி அணி சாம்பியன்

புதன் 7, டிசம்பர் 2022 3:39:51 PM (IST)



தமிழ்நாடு பாரத சாரண, சாரணிய இயக்கம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் தூத்துக்குடி மாவட்ட சாரண, சாரணிய இயக்கம் மொத்த சாம்பியன் கேடயம் வென்றது.

திருச்சியில் பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் மாநிலப் பெருந்திரளணி கிழக்கு மண்டலம் சார்பாக நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டம் கிராமிய நடனத்தில் முதலிடத்தையும், தூத்துக்குடி கலாச்சார அணிவகுப்பில் முதலிடத்தையும், சாரண, சாரணிய இயக்க அணிவகுப்பில் இரண்டாம் இடத்தையும், கண்காட்சியில் முதலிடத்தையும், உணவுப்பொருள் கண்காட்சியில் முதலிடத்தையும், உடல்திறன் போட்டிகளில் முதலிடத்தையும், 

கைவினைப் பொருட்கள் செய்தலில் இரண்டாம் இடத்தையும், வரவேற்பு அணிவகுப்பில் முதலிடத்தையும், கலைநிகழ்ச்சிகளில் முதலிடத்தையும், கூடாரப் பொருட்கள் செய்தலில் இரண்டாம் இடத்தையும் பிடித்து வெற்றிக் கேடயம் பெற்றுள்ளனர். 

பெருந்திரளணியில் வெற்றிக் கேடயத்தை பாரத சாரண, சாரணிய இயக்க மாநிலத்தின் தலைவரும், கல்வி அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் செ.எட்வர்ட் ஜான்சன்பால்-யிடம் வழங்கி பாராட்டினார். சான்றிதழ்களை மாநிலச் செயலாளரும், இணை இயக்குநருமான பி.ஏ.நரேஷ் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சி.எம் மேல்நிலைப் பள்ளி, ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி, துறைமுக மேல்நிலைப் பள்ளி, புனித லசால் மேல்நிலைப் பள்ளி, எஸ்ஏவி மேல்நிலைப் பள்ளி, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் இருந்து 24 சாரணர்கள், 24 சாரணியர்கள், 11 பொறுப்பாசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் வெற்றி பெற்றதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பால தண்டாயுதபாணி, மாவட்டக் கல்வி அலுவலர்  (தனியார் பள்ளிகள்) பிரபாகுமார், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மாவட்டக் கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி ஆகியோர் சாரண, சாரணியர்கள், பொறுப்பாசிரியர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சாரண, சாரணிய இயக்க மாவட்டத் தலைவர் ஏ.மங்கள்ராஜ், மாவட்டச் செயலாளர்  செ.எட்வர்ட் ஜான்சன்பால், மாவட்ட ஆணையர் (சாரணர்) பி.சரவணன், மாவட்ட ஆணையர் (சாரணியர்) பி.ஜெயசுசிலா, மாவட்ட அமைப்பு ஆணையர் (சாரணர்) டி.அல்பர்ட் தினேஷ் சாமுவேல், மாவட்ட அமைப்பு ஆணையர் (சாரணியர்) என்.வள்ளியம்மாள், மாவட்டப் பயிற்சி ஆணையர் (சாரணியர்) ஆ.ஜெயாசண்முகம், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரிய, ஆசிரியைகள் சிறப்பாக செய்திருந்தனர். 

மாவட்டச் செயலாளர் செ.எட்வர்ட் ஜான்சன்பால் பெருந்திரளணியில் பங்கு பெற்று வெற்றிப் பெற்ற சாரண, சாரணியர்கள், பொறுப்பாசிரியர்கள், அவர்களை அனுப்பி வைத்த தலைமையாசிரியர்கள் ஆகியோர்களை பாராட்டி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory