» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் புதிய துணை மின் நிலையம் துவக்க விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!

செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 3:29:21 PM (IST)



தூத்துக்குடி ரோச் பூங்கா அருகில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணை மின் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். 

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், 161 கோடியே 38 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார். மேலும், 51 துணை மின் நிலையங்களில் 602 எம்.வி.ஏ அளவிற்கு திறன் உயர்த்தி 97 கோடியே 56 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 52 எண்ணிக்கையிலான மின் மாற்றிகளின் செயல்பாட்டினையும் தொடங்கி வைத்தார்.

இதன்படி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி, தூத்துக்குடி பீச் ரோடு ரோச் பார்க் அருகில் உள்ளிட்ட 11 பகுதிகளில்  147 கோடியே 97 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள், நடுவக்குறிச்சியில் துணை மின் நிலையமாக தரம் உயர்த்துதல் உட்பட பல்வேறு பணிகளை முதலமைச்சர் துவக்கி வைத்தார். இதையொட்டி தூத்துக்குடி ரோச் பூங்கா துனை மின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி துனை மின் நிலையத்தை பார்வையிட்டார். விழாவில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோட்டாட்சியர் சிவ சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory