» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொண்டர்கள் புடைசூழ அதிமுக அலுவலகத்திற்கு செல்வேன் : சசிகலா அறிவிப்பு

திங்கள் 4, ஜூலை 2022 11:23:02 AM (IST)

அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ்  மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், தலைமை செயலகத்திற்கு செல்லப் போவதாக சசிகலா அறிவித்து இருப்பது அந்த கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் பதவிக்காக பன்னீரும் பழனிசாமியும் முற்றிக் கொண்டு இருக்கும் நிலையில், தாமே பொதுச் செயலாளர் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கும் சசிகலாவும் 3ம் ஆட்டத்தில் இணைய காத்திருக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் பேசிய அவர்,  ஒருவரின் சுயநலத்திற்காக உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை கிடைக்க விடாமல் செய்ததை ஏற்க முடியாது என்றார். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் தொண்டர்களுடன் செல்ல இருப்பதாகவும் அதிமுகவில் இருந்து யார் யாரையும் நீக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

இதனிடையே பூந்தமல்லியில் பேசிய சசிகலா,அதிமுகவிற்கு ஒற்றை தலைமை கண்டிப்பாக வேண்டும். அதே சமயத்தில் தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்து செல்கின்ற தலைமையாக, தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற தலைமையாக இருக்க வேண்டும். பண பலமும், படை பலமும் ஒரு தலைமையை தீர்மானிக்க முடியாது. மக்கள் பலமும், தொண்டர் பலமும் தான் ஒரு தலைமையை தீர்மானிக்கும். 

தனக்கு ஆதரவாக சிலரை பேச வைத்து விட்டு நான் தான் தலைமை என்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு வலுக்கட்டாயமாக நாற்காலியை பிடித்து கொண்டு இருந்தால் தலைவராக ஆகிவிட முடியாது என்றார்.  அதிமுகவில் ஒற்றைத் தலைமையை முன்வைத்து பூகம்பமே வெடித்து இருக்கும் நிலையில், ஜூலை 11ம் தேதி அறிவிக்கப்படி பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா ? நடந்தாலும் செல்லுபடி ஆகுமா ? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 


மக்கள் கருத்து

அப்படியாJul 5, 2022 - 08:43:52 AM | Posted IP 162.1*****

இவரால்தான் அதிமுகவுக்கு அழிவு

SAAMYJul 4, 2022 - 04:33:11 PM | Posted IP 162.1*****

தொண்டர்கள் எங்கே? உங்களுக்கு தொண்டர்களே கிடையாது....MGR / JAY விசுவாசிகள் எல்லோரும் EPS கூட உள்ளார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory