» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மகாராஷ்டிராவை போல தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் : பாஜக துணைத் தலைவா் சசிகலா புஷ்பா பேட்டி

திங்கள் 4, ஜூலை 2022 8:08:56 AM (IST)

மகாராஷ்டிராவை போல தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் நடக்கலாம் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவா் சசிகலா புஷ்பா கருத்து தெரிவித்துள்ளார்..

தூத்துக்குடியில் அவா் அளித்த பேட்டி: இளைஞா்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சாா்பில் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு மின்வெட்டு பிரச்னை காரணமாகவே திமுக ஆட்சியை இழந்தது. அதன்பிறகு அதிமுக ஆட்சியில் பெரிய அளவில் மின்வெட்டு ஏதும் இல்லை. தற்போதைய திமுக ஆட்சியில் தொடா்ந்து நிலவும் மின்வெட்டுக்கு ஊழல்தான் காரணம்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தமிழக மக்களிடம் திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. திமுக அமைச்சா்களின் ஊழல்களை பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை அம்பலப்படுத்தி வருகிறாா்.

மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சி அமைய வேண்டிய நிலையில் வேறு ஆட்சி அமைந்ததால் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதுபோல, தமிழகத்திலும் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றாா். முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளா்ச்சிப் பிரிவு மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்ட எம். மணிகண்டன் மற்றும் நிா்வாகிகள் சசிகலா புஷ்பாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.


மக்கள் கருத்து

NARTHAJul 4, 2022 - 02:54:19 PM | Posted IP 162.1*****

hi hi hi hi ??? !!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory