» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண் ஊழியருக்கு பாலியல் துன்புறுத்தல்: துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பதவியிறக்கம்!

வியாழன் 26, மே 2022 4:06:47 PM (IST)

பெண் ஊழியரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை பதவியிறக்கம் செய்து ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பா.நாராயணன் என்பவர் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்த போது தனது கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த காரணத்திற்காக தனியர் மீது பிறப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இறுதி உத்தரவாக தற்போது வகிக்கும் பதவியிலிருந்து இரு நிலை கீழ் இறக்கம் செய்யப்பட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலிருந்து இளநிலை உதவியாளராக பதவியிறக்கம் செய்யப்பட்டார். 

பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் தனக்கு நேரிட்ட பாலியல் துன்புறுத்தலை துணிச்சலுடன் புகார் செய்ததை பாராட்டி, இதே போன்ற பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும்போது பிற பெண் அரசு ஊழியர்களும் தைரியமாக எதிர்த்து நிற்கும் வண்ணம் பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013 பிரிவு 13 மற்றும் 15(அ) இன் படி குற்றம் புரிந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து ரூ.10,000/- ஒரே தவணையில் பிடித்தம் செய்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்க மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில்ராஜ்   உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory