» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வியாழன் 26, மே 2022 3:58:18 PM (IST)

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கன மழை தொடரும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருப்பத்தூர், வேலூர் உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர், திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், தர்மபுரி, சேலம், திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 16 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் ஆவடியில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பெய்துள்ளது. சோழவந்தான், நடுவட்டம், தாமரைப்பாக்கத்தில் 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory