» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரங்கு அம்மை நோய் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வியாழன் 26, மே 2022 3:39:51 PM (IST)

குரங்கு அம்மை நோய் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை சுமார் 7.01 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். கரோனா முதல் தவனை தடுப்பூசியை 93.76 சதவீதம் பேரும், இரண்டாம் தவனை தடுப்பூசியை 82.48 சதவீதம் செலுத்தி உள்ளனர்.

ஜூன் 12 ஆம் தேதி ஒரு லட்சம் இடஙகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் இதுவரை யாருக்கும் கண்டறியப்படவில்லை. இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்ததில், சோதனை முடிவுகள் நெகட்டிவ் ஆகவே வந்துள்ளது. குரங்கு அம்மை நோய் குறித்து அச்சம் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory