» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜி-ஸ்கொயர் வழக்கில் விகடன் பத்திரிகையின் இயக்குநர் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் நீக்கம்!

வியாழன் 26, மே 2022 3:35:13 PM (IST)

ஜி-ஸ்கொயர் வழக்கில், ஆதாரம் இல்லாததால் விகடன் பத்திரிகையின் இயக்குநர் உள்ளிட்ட சிலரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையிலிருந்து  நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

கெவின் என்பவர் ஜுனியவர் விகடன் மற்றும் சமூக ஊடகவியலாளர்கள் மூலம் அவதூறாக செய்தி பரப்புவோம் என மிரட்டி பணம் கேட்பதாகக் கூறி 'ஜி ஸ்கொயர்' என்ற தனியார் கட்டுமான நிறுவனம், கடந்த 21ம் தேதி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதன்பேரில், கடந்த 22ம் தேதி கெவினை போலீசார் கைது செய்தனர். மேலும், ஜுனியர் விகடன் பத்திரிகையின் இயக்குநர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர், சமூக ஊடகவியலாளர் மாரிதாஸ் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கு பத்திரிகையாளர்கள் மற்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பையும், கண்டனங்களையும் தெரிவித்தனர். இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜி-ஸ்கொயர் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஆதாரம் இல்லாததால் விகடன் பத்திரிகையின் இயக்குநர் உள்ளிட்ட சிலரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையிலிருந்து  நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணையில் கெவின், 50 லட்சம் ரூபாய் கேட்டு பிளாக் மெயில் செய்தது புலனாயிற்று என்றும் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory