» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டாரஸ் லாரி திருட்டு: புகாரளித்த ½ மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!

வியாழன் 26, மே 2022 7:49:15 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள டாரஸ் லாரி திருடு போனதாக புகாரளித்த ½ மணி நேரத்தில் துரிதமாக லாரியை கண்டுபிடித்த போலீசாருக்கு எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கணேசபுரம் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் தங்கபாண்டி (76) என்பவருக்கு சொந்தமான டாரஸ் லாரியை அதன் ஓட்டுநரான காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த அப்துல்காதர் மகன் அப்பாஸ் (58) என்பவர் கடந்த 24ம் தேதி மாலை 4  மணிக்கு கல்லாமொழி அனல்மின் நிலைய பகுதியில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை 9 மணிக்கு சென்று பார்க்கும்போது நிறுத்தி வைத்திருந்த லாரி காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து லாரியின் உரிமையாளர் தங்கபாண்டி அளித்த புகாரின் பேரில் குலசேகரபட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் லாரியில் இருந்த ஜிபிஎஸ் கருவியின் மூலம் லாரி திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி ரோடு பகுதியில் உள்ளதை அறிந்த போலீசார் தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு அலுவலக அதிகாரிகள்  திருநெல்வேலி நகர மற்றும் ஊரக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக திருநெல்வேலி பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிமுருகன் மற்றும் திருநெல்வேலி ஊரக காவல்துறை நெடுஞ்சாலை ரோந்து வாகன தலைமை காவலர் முருகன் மற்றும் காவலர் சொர்ணகுமார் ஆகியோர் சீவலப்பேரி ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்த மேற்படி காணாமல் போன லாரியை கண்டுபிடித்து மீட்டு குலசேகரபட்டினம் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

காணாமல்போன லாரியை புகாரளித்த ½ மணி நேரத்தில் கண்டுபிடித்து பறிமுதல் செய்த தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார். மேலும் மேற்படி லாரியை திருடிய எதிரிகளை விரைந்து கைது செய்ய திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் மேற்பார்வையில் குலசேகரபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ரகுராமன் தலைமையில் உதவி ஆய்வாளர் முனியாண்டி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

fkdjfhமே 26, 2022 - 12:36:25 PM | Posted IP 162.1*****

thiruttukku peyar pona oor

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory