» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டில் இரவுநேர ஊடரங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
வியாழன் 27, ஜனவரி 2022 9:58:20 PM (IST)
தமிழ்நாட்டில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இரவுநேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதில், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை (30-1-2022) முழு ஊரடங்கும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத்தலங்களில் அனுமதி
தமிழகத்தில் நாளை முதல் அனைத்து நாள்களிலும் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேசமயம் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்களை அனுமதிக்க இந்துசமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக கரோனா பரவல் காரணமாக வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தா்கள் தரிசனம் செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிப்.1 முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள்
தமிழகத்தில் பிப்.1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடியாக வகுப்புகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
kumarJan 28, 2022 - 01:04:53 PM | Posted IP 108.1*****
ooradangu arivitha nalai vida ippothu corona case number athigamaga ullathu..ippothu eppadi arasu ooradangai thalarugirathu??
மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்
ஞாயிறு 13, ஜூலை 2025 11:05:42 AM (IST)

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

காவல் நிலையத்தில் பெண் தற்கொலை முயற்சி : தூத்துக்குடியில் பரபரப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 8:09:20 AM (IST)

மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25-ம் தேதி கமல்ஹாசன் பதவி ஏற்பு!
சனி 12, ஜூலை 2025 5:16:32 PM (IST)

குரூப் 4 தேர்வு வினாத்தாள் எதுவும் கசியவில்லை: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் பேட்டி
சனி 12, ஜூலை 2025 4:41:25 PM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஓ ஓJan 28, 2022 - 08:27:50 PM | Posted IP 162.1*****