» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கல்லூரி பருவத் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும்’: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
வெள்ளி 21, ஜனவரி 2022 12:26:55 PM (IST)
கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இணையவழியாக நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
கரோனா மூன்றாம் அலை பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது: "கல்லூரி தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறாது எனக் கூறியிருந்தோம். ஆனால், தற்போதைய சூழலில் நேரடியாக நடத்த வேண்டுமானால் நாள்கள் தள்ளிப் போகும் என்பதால் ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளிலும் பிப்ரவரி 1 முதல் 20ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படும்.பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பின்னர், கரோனா சூழலை பொறுத்து சுகாதாரத்துறை அறிவுரையின்படி நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கான இறுதி பருவத் தேர்வு சுழற்சி முறையில் கட்டாயம் நேரடியாக மட்டுமே நடைபெறும்.ஆன்லைன் தேர்வில் முறைக்கேடு நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கு மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும். மேலும், பாடத்திட்டங்கள் புதுப்பிக்கும் பணி கல்வியாளர்களின் அறிவுரையின்படி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.”
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு!
செவ்வாய் 8, ஜூலை 2025 12:43:26 PM (IST)

இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 12:37:58 PM (IST)

நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்: தமிழ்நாட்டில் பஸ்-ஆட்டோக்கள் ஓடாது...?
செவ்வாய் 8, ஜூலை 2025 12:26:11 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி: முதல்வர் இரங்கல் - ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 10:47:13 AM (IST)

ரயில் விபத்தில் 2 மாணவர்கள் பலி: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
செவ்வாய் 8, ஜூலை 2025 10:40:28 AM (IST)
