» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை கூடுதல் தலைமைச்செயலாளர் ஆய்வு

செவ்வாய் 18, ஜனவரி 2022 3:27:58 PM (IST)



நெல்லையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் சீர்மிகு திட்டத்தின கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. சீர்மிகு திட்ட பணிகளை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன், முன்னிலையில் இன்று (18.01.2022); கொக்கிரக்குளம் பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பாளையங்கோட்டை மண்டலத்தில் சீர்மிகு திட்டத்தின் கீழ் ரூ.14.95 கோடி மதிப்பிட்டில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வரும் வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து கொக்கிரகுளம் பகுதியில், அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ரூ.85.56 கோடி மதிப்பிட்டில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சந்திப்பு பேரூந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள், சந்திப்பு பகுதியில் பாதள சாக்கடை மூலம் கழிவு நீர் தடையின்றி செல்வதற்கான அமைக்கப்பட உள்ள பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து தச்சநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளையும், நயினார்குளம் கரை சீரமைப்பு பணிகளையும் பார்வையிற்று ஆய்வு செய்து ராமையன் பட்டியில் ரூ.14.50 கோடி மதிப்பில் பழைய குப்பைகளை தனித்தனியாக பிரித்து மக்கும் குப்பைகளை நவீனமுறையில் உரமாக்கும் திட்டத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். அனைத்து திட்ட பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளைகேட்டு கொண்டனர். ஆய்வின் போது மாநகர நல அலுவலர் ராஜேந்திரன், பொறியாளர் (பொ) நாராயணன் உட்பட மாநகர அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory