» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151-வது தைப்பூச திருவிழழ ஜோதி தரிசனம்!

செவ்வாய் 18, ஜனவரி 2022 8:11:20 AM (IST)

வடலூரில் தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் இன்று (செவ்வாய்க்கிழமை) சத்திய ஞானசபையில் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஜோதி தரிசனம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 151-வது ஜோதி தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 5 மணிக்கு அகவல் பாராயணம் நடந்தது. பின்னர் வள்ளலார் அவதரித்த மருதூர் இல்லத்திலும், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லத்திலும், வடலூர் தருமசாலை, வள்ளலார் சித்திப்பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் காலை 7.30 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்

இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் இன்று (செவ்வாய்க்கிழமை) சத்திய ஞானசபையில் நடைபெற்றது. இதையொட்டி 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. 151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா நடைபெற்றது. இந்த ஜோதி தரிசன விழாவில் பக்தர்கள் பங்கேற்க மாவட்ட நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜோதி தரிசனத்தை தொலைக்காட்சி மூலமாக பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நாளை (புதன்கிழமை) காலை 5.30 மணி என 6 காலங்களில் கருப்பு, நீலம், பச்சை, செம்மை, பொன்மை, வெண்மை, கலப்பு ஆகிய 7 திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. விழாவையொட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஞானசபை வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தும், கட்டுப்பாட்டு அறைகள் அமைத்தும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory