» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 10 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஜன.31 வரை விடுமுறை- அரசு அறிவிப்பு

ஞாயிறு 16, ஜனவரி 2022 6:10:39 PM (IST)

கரோனா பரவல் காரணமாக, 10, 11, 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,  கரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அதிகரித்து வரும் கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனையடுத்து, வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory