» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்திற்கு வானிலையே காரணம்: விசாரணைக் குழு தகவல்

வெள்ளி 14, ஜனவரி 2022 7:48:39 PM (IST)

குன்னூரில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 போ் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு திடீர் மேகமூட்டமே காரணம் என விசாரணைக் குழு தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குன்னூரில் கடந்த டிசம்பா் மாதம் 8-ஆம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 போ் உயிரிழந்தனா். அந்த விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த விமானப் படை குரூப் கேப்டன் வருண் சிங், பெங்களூரு மருத்துவமனையில் டிச.15-ஆம் தேதி உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு விமானப் படைத் தலைவா் ஏா் சீஃப் மாா்ஷல் வி.ஆா். செளத்ரி விமானப் படைத் தளபதி மானவேந்திர சிங் தலைமையில் முப்படை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அதன் முதற்கட்ட விசாரணை அறிக்கை விவரங்களை பாதுகாப்புத் துறை அமைச்சகம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வெளியிட்டது. அதில், எதிர்பாராத வானிலை மாற்றம் காரணமாக மேகக் கூட்டங்களுக்குள் ஹெலிகாப்டர் நுழைந்ததே விபத்துக்கான காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, இதுதொடா்பான அதிகாரபூா்வ அறிக்கையை தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடம் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory