» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: குன்னூர் விரைகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

புதன் 8, டிசம்பர் 2021 3:18:03 PM (IST)

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை கோவை செல்கிறார். 

வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து சூலூர் சென்ற ராணுவ உயர் அதிகாரிகள் சென்ற விமானப் படை ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய விமானப்படை ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் பயணித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. தமிழக சுகாதாரத்துறை சார்பில் கோவையில் இருந்து 6 சிறப்பு மருத்துவக்குழுக்கள் சூலூர் சென்றுள்ளன. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விபத்து நடந்த இடத்துக்கு நேரடியாக செல்கிறார். இன்று மாலை 5 மணியளவில் அவர் கோவை செல்லவிருக்கிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory