» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது கடும் நடவடிக்கை
புதன் 8, டிசம்பர் 2021 11:56:06 AM (IST)
அரசு பேருந்துளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. தணிக்கையாளர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது மாணவர்கள் படிக்கட்டு பயணத்தை முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பான முறையில் பேருந்தில் ஏறி இறங்குவதை உறுதி செய்த பின்பே பேருந்துகளை இயக்க வேண்டும். பஸ்சில் போதிய இடவசதி ஏற்படுத்தி கொடுத்து படிக்கட்டில் நிற்காதாவாறு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் படிகட்டிகளில் நின்று பயணம் செய்யாதவாறு ஓட்டுனரும், நடத்துனரும் பணியாற்ற வேண்டும். மாணவர்கள், மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கூடுதல் பஸ்களை இயக்க ஏதுவாக உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும் என போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது. படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க போக்குவரத்துதுறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் விற்பனை கண்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
சனி 13, டிசம்பர் 2025 3:13:37 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)


.gif)
ஆமாப்பாDec 8, 2021 - 03:18:19 PM | Posted IP 173.2*****