» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியுடன் சசிகலா சந்திப்பு
செவ்வாய் 7, டிசம்பர் 2021 4:03:34 PM (IST)

நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா இன்று சந்தித்துப் பேசினார். அப்போது அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்ததுடன், தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
டெல்லியில் அக்டோபர் 25-ம் தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. சென்னை திரும்பிய ரஜினி, குடும்பத்தினருடன் தனது நடிப்பில் உருவான ‘அண்ணாத்த’ திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்தார். இந்நிலையில், அக்டோபர் 28-ம் தேதி ரஜினிக்கு மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டதில், மூளைக்குச் செல்லும் கழுத்துப் பகுதியில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து, அடைப்பைச் சரிசெய்தனர். அவருக்கு ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், அவரது உடல்நிலையை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வந்தனர்.
சிகிச்சைக்குப் பின்னர், ரஜினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அக்டோபர் 31-ம் தேதிரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். தற்போது ரஜினிகாந்த் ஓய்வெடுத்து வருகிறார்.இந்நிலையில் ரஜினிகாந்தை சசிகலா இன்று சந்தித்தார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. ரஜினியின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்த சசிகலா, தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக ரஜினிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கப்பலில் இறந்த 3பேருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:48:22 PM (IST)

போதைப் பொருள் என்பது ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றாகும் : அமைச்சர் பி.கீதா ஜீவன் பேச்சு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:31:17 PM (IST)

உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:25:05 PM (IST)

அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான விதிமுறைகள் : த.வெ.க. வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:12:16 PM (IST)

முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பயிர்களை பயிரிட வேண்டும் : ஆட்சியர் க.இளம்பகவத்.
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:35:38 PM (IST)

திமுக உடன் கூட்டணி கிடையாது.. அதையும் தாண்டி புனிதமானது - கமல்ஹாசன் விளக்கம்
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:20:49 PM (IST)
