» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இராமநாதபுரத்தில் போலீசார் தாக்கியதால் கல்லூரி மாணவர் மரணம்? காவல் துறை விளக்கம்

திங்கள் 6, டிசம்பர் 2021 4:41:17 PM (IST)

இராமநாதபுரத்தில் போலீசார் தாக்கியதால் மரணம் அடைந்ததாகக் கூறப்படும் மணிகண்டனின் மரணத்திற்கு நீதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (21). கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்ததில் மணிகண்டன் இறந்து விட்டதாக கூறினர். நேற்று காலை முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு மணிகண்டன் உடலை மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு வந்தனர். அப்போது உறவினர்கள் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற மணிகண்டனை, போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியதில் இறந்ததாக கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களுடன், ராமநாதபுரம் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி திருமலை, டிஎஸ்பி ஜான் பிரிட்டோர் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது சமரசத்துக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. மணிகண்டன் உறவினர்கள், ‘‘எஸ்.பி நேரடியாக விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். 

போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘‘கீழத்தூவல் காவல் நிலையத்தில் விசாரணைக்காக மணிகண்டன் வந்து, செல்லும் கேமரா பதிவுகள் உள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் இறப்பு குறித்து முழுமையான முடிவுகள் தெரிய வரும்’’ என்றனர். இந்நிலையில் காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மணிகண்டனின் மரணத்திற்கு நீதி கேட்டு #JusticeForManikandan என்ற ஹேஸ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதேபோல் பேஸ்புக்கிலும் மனிகண்டனின் மரணத்திற்கு நீதி கேட்டு #JusticeForManikandan என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.


மக்கள் கருத்து

உலகம் அப்படிதான்Dec 7, 2021 - 08:24:09 AM | Posted IP 162.1*****

குற்றவாளி காவலராக இருந்தாலும் இடமாற்றம், பணிநீக்கம் தான் வரும். ஆனால் காவல்துறையினருக்கு தண்டனை கிடைக்கவே கிடைக்காது உண்மையே..

உலகம் அப்படிதான்Dec 7, 2021 - 08:24:05 AM | Posted IP 162.1*****

குற்றவாளி காவலராக இருந்தாலும் இடமாற்றம், பணிநீக்கம் தான் வரும். ஆனால் காவல்துறையினருக்கு தண்டனை கிடைக்கவே கிடைக்காது உண்மையே..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory