» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு வேட்பு மனு ஏற்பு: ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். போட்டியின்றி தேர்வு!
ஞாயிறு 5, டிசம்பர் 2021 8:43:33 PM (IST)
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன.

மேலும் 3, 4-ந் தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் மற்றும் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையாளர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வேட்பு மனுக்களை பெற்றனர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி நேற்று மனுதாக்கல் செய்தனர். நேற்று பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் 154 மனுக்கள் பெறப்பட்டதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மனுக்களில் பெரும்பாலான மனுக்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்டாலும், வேறு சிலரும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வேட்பு மனு தாக்கல் செய்துள்ளவர்களை 15 பேர் முன் மொழியவும், 15 பேர் வழி மொழியவும் செய்து இருக்க வேண்டும். இந்த 30 பேரும் 5 ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினர்களாக இருப்பதுடன், எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாதவர்களாக இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சட்டவிதி கூறுகிறது.
எனவே, இவற்றை காரணம் காட்டி, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் வேட்புமனுக்களை தவிர பிற மனுக்கள் அனைத்தும் வேட்புமனு பரிசீலனையின்போது நிராகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
எனவே, வேட்புமனு திரும்ப பெறும் நாளான 6-ந் தேதி (நாளை) மாலையே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடும் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்புமணி எனது பெயரை பயன்படுத்த கூடாது: ராமதாஸ் அதிரடி!
வெள்ளி 11, ஜூலை 2025 11:02:01 AM (IST)

நடிகர் கிங் காங் மகள் திருமண வரவேற்பு விழா : முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!
வெள்ளி 11, ஜூலை 2025 10:14:05 AM (IST)

குழந்தைகள் இல்லத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 5:06:20 PM (IST)

சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு விதித்த தடை நிறுத்தி வைப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 10, ஜூலை 2025 4:27:01 PM (IST)

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மானியம் மறுப்பதா? திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
வியாழன் 10, ஜூலை 2025 3:50:04 PM (IST)

புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஜூலை 2025 3:15:25 PM (IST)

சாதாரண தொண்டன்Dec 7, 2021 - 08:26:15 AM | Posted IP 173.2*****