» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளியை திறக்கக் கோரி கடிதம் எழுதிய சிறுமி: செல்போனில் தொடர்புகொண்டு பேசிய முதல்வர்

வெள்ளி 15, அக்டோபர் 2021 5:34:37 PM (IST)

தமிழகத்தில் பள்ளியை திறக்கக் கோரி கடிதம் எழுதிய சிறுமியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்போனில் தொடர்புகொண்டு உரையாடியுள்ளார். 

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஓசூர், டைட்டன் டவுன்ஷிப்பைச் சேர்ந்த ரவிராஜன்- உதயகுமாரி ஆகியோரின் மகள் பிரஜ்னா அவர்கள், பள்ளிகளைத் திறக்கும்படி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அவரது தொலைபேசி எண்ணிற்கு இன்று (15.10.2021) தொடர்புகொண்டு பேசிய முதலமைச்சர், நவம்பர் 1-ஆம் நாள் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அப்படித் திறக்கப்படும்போது அம்மாணவி பள்ளிக்குச் செல்லலாம்-கவலைப்பட வேண்டாம் என்றும் கூறியதோடு, ஆசிரியர்கள் கூறுவதைக் கேட்டு தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிந்துகொள்ளுதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தி, நன்றாக படிக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.


மக்கள் கருத்து

kumarOct 16, 2021 - 11:21:13 AM | Posted IP 173.2*****

deepavali kalithu palligalai thiranthal siruvargal santhosamaga iruppargal...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory