» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவில்கள், நர்சரி பள்ளிகள் திறக்க அனுமதி: நவ.1 முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

வியாழன் 14, அக்டோபர் 2021 9:38:53 PM (IST)

தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தளங்களை திறக்க தமிழ்நாடு அனுமதி அளித்துள்ளது. மழலையர், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது

கரோனா பரவல் கட்டுக்குள் இருக்கும் நிலையில் கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரு சிலவற்றிற்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அவை, 

மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தலாம்.

தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருள்காட்சிகள் உரிய கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படலாம்.

மழலையர், நர்சரி பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரைக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமணம் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேர் வரை பங்குபெற அனுமதி

இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் வரை கலந்துகொள்ளலாம் 
இன்று முதல் எவற்றுக்கெல்லாம் அனுமதி

ஏற்கெனவே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள உணவகங்கள் மற்றும் கடைகள், அடுமனைகள் இன்று முதல் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வார இறுதி நாள்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தனியார் பயிற்சி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவையும் இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

பொதுவான வழிகாட்டு நடைமுறைகள் 

கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து கடைகளும் குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பொதுவான வழிகாட்டு நடைமுறைகள் 

கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து கடைகளும் குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory