» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் திறக்கும் நேரம் அதிகரிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

வியாழன் 14, அக்டோபர் 2021 11:51:11 AM (IST)

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் திறக்கும் நேரத்தை அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில், "உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் தலைமையில் அக். 11ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு நவம்பர் மாதத்திற்கான பொருள்கள் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் விரைவில் தந்து முடிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், தீபாவளி முன்னிட்டு நவம்பர் 1, 2 மற்றும் 3ஆம் தேதிகளில் அனைத்து ரேஷன் கடைகளும் காலை 8 மணிமுதல் இரவு 7 மணிவரை திறந்து அனைத்து அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்.”


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory