» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மின் வாரியத்தை செழிப்பாக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது: முதல்வர் பேச்சு
வியாழன் 23, செப்டம்பர் 2021 11:45:18 AM (IST)

முந்தைய அ.தி.மு.க. அரசு சீரழித்த மின் வாரியத்தை செழிப்பாக்கும் நடவடிக்கைகளை தற்போதைய திமுக அரசு மேற்கொண்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்ட தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அமைச்சர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பணியாற்றுகின்றனர். ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். விவசாயிகளின் முகத்தில் சிரிப்பை காணும் வகையில் ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி உழவர்களுக்கானது.
4.5 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்த நிலையில் முதல் கட்டமாக 1 லட்சம் பேருக்கு இணைப்பு தர திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை 4 மாதத்தில் நிறைவேற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் விவசாயிகளுக்கு மொத்தமாகவே 2 லட்சம் மின் இணைப்புகள் தான் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் ஒரு லட்சம் இணைப்புகள் வழங்கப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்வாரியத்தை சீரழித்துள்ளனர். ஆனால் 4 மாதத்திலேயே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு தரும் திட்டத்தை தொடங்கி உள்ளோம். 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசை எச்சரிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் புதிய மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்தியாவிலேயே விரைவாக செயல்படும் அரசு தமிழக அரசு தான். மின்சார வாரியத்தை செழிப்பாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவாரூரில் முதல் சூரிய சக்தி மின் பூங்கா அமைக்கப்பட உள்ளது. புதிய மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகள் மின்சாரத்தை தேவைக்கேற்ப சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து சென்னை அண்ணா நூலகத்தில் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புக்கான ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொய்களைப் பேசி வருகிறார்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:51:55 PM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)

நெல்லை, ராமேசுவரம் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:28:06 AM (IST)

தேர்தலில் பிரச்சாரம் செய்வீர்களா? நோ கமெண்ட்ஸ் எனக் கூறிப் புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்!
சனி 4, ஏப்ரல் 2026 9:39:21 PM (IST)

உங்கள் தேவைகள் நிறைவேற தவெக துணை நிற்கும் : புதுவையில் விஜய் பிரச்சாரம்!
சனி 4, ஏப்ரல் 2026 5:48:31 PM (IST)

தேர்தலுக்காக வருபவர்களைப் புறக்கணிப்பீர் : தூத்துக்குடியில் கீதா ஜீவன் வாக்கு சேகரிப்பு!
சனி 4, ஏப்ரல் 2026 4:59:47 PM (IST)

