» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் முறைக்கேடாக நகைக் கடன்: பணத்தை வசூலிக்க உத்தரவு

புதன் 22, செப்டம்பர் 2021 11:20:01 AM (IST)

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் முறைக்கேடாக நகைக் கடன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. 

கடன் தள்ளுபடிக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர், வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்திருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து, முறைகேடாக நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து பணத்தை திருப்பி வசூலிக்க அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் பலர், கடன் தள்ளுபடிக்காக, ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ளது  தெரியவந்துள்ளது. எனவே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் நகைக்கடன் பெற்றிருந்தாலும் 5 சவரனுக்கு மேலான கடனுக்கான தொகையை வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நகைக்கடன் தவணை தவறி இருப்பின் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை பின்பற்றி தொகையை வசூல் செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory