» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரேஷன் கடைகளில் மக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை

செவ்வாய் 21, செப்டம்பர் 2021 3:55:08 PM (IST)

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொதுமக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன்  கடைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது எனவும் அதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடை மேலாளர்களுக்கும்  ஒரு சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது;-

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலமாக விரல் கைரேகை பெற்று அதன் மூலமாக பொது விநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும். அதேபோல் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் நேரடியாக வந்து பொருட்களை வாங்க முடியாத பட்சத்தில் மாற்றாக வேறொருவர் வந்து வாங்குவதற்கு அத்தாட்சி கடிதம் வழங்க வேண்டும். அந்த கடிதத்தை காண்பித்து அவர்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்று கொள்ளலாம்.

ஆனால் ஒருசில ரேஷன் கடைகளில் பொதுமக்களை அலைக்கழிப்பதாக புகார்கள் வருகின்றன. பொதுமக்களை அலைக்கழிக்கக் கூடிய ரேஷன் கடை ஊழியர்களுக்கும் அங்கிருக்கக்கூடிய அதிகாரிகளுக்கும் இனிவரும் காலங்களில் பொதுமக்களை அலைக்கழிப்பதாக புகார் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory