» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாநிலங்களவைத் தேர்தல்: முதல்வர் தலைமையில் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

செவ்வாய் 21, செப்டம்பர் 2021 3:24:09 PM (IST)



மாநிலங்களவையில் 2 இடங்களுக்கு நடைபெறவுள்ள இடைத் தோ்தலில் திமுக வேட்பாளா்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதிமுகவில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோா் கடந்த மே 7-ஆம் தேதி தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனா். அதில், வைத்திலிங்கத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு (2022) ஜூனிலும், கே.பி.முனுசாமியின் பதவிக் காலம் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதியும் நிறைவடைகிறது.

இந்த இடங்களுக்கு திமுக சார்பில் டாக்டர். கனிமொழி என்.வி.என்.சோமு, கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் ஆகியோா் வேட்பாளா்களாக போட்டியிடுவா் என முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப்பேரவை செயலாளருமான சீனிவாசனிடம் திமுக வேட்பாளர்கள் இருவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். 2022ஆம் ஆண்டுடன் முடிவடையவுள்ள வைத்தியலிங்கம் இடத்திற்கு கே.ஆா்.என்.ராஜேஷ்குமாரும், 2026ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள கே.பி.முனுசாமி இடத்திற்கு டாக்டர் கனிமொழியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory