» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
செவ்வாய் 14, செப்டம்பர் 2021 5:39:44 PM (IST)

இந்தியாவிலேயே தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். வேலைவாய்ப்பு மற்றும் இடஓதுக்கீட்டில் பெண்களுக்கு அதிகளவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் என திருத்தணியில் நடந்த நலதிட்ட விழாவில் கனிமொழி எம்.பி., பேசினார்.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் உயர்மின் கோபுர விளக்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று திருத்தணியில் நடந்தது. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். நகர பொறுப்பாளர் வினோத்குமார் வரவேற்றார். மகளிர் அணி நிர்வாகிகள் சின்னபாப்பா ,மஞ்சுளாகுமார், காந்திமதி, வசந்தி, புனிதவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை குழு துணைத் தலைவர் கனிமொழிகருணாநிதி பங்கேற்று திருத்தணி பெரியார் நகரில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் அமைத்த உயர்மின் மின்கோபுரம் திறந்து வைத்தார். பின் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கனிமொழி எம்.பி., பேசியதாவது: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றனர். நமது முதல்வர் ஸ்டாலின் எம்.எல்.ஏ.,களுக்கு தொகுதி மேம்பாடு நிதி ஒதுக்கீடு செய்து, தொகுதி மக்களின் அடிப்படை பணிகள் செய்து கொள்ள 3 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்,
ஆனால் ஒன்றிய அரசாங்கம் கொரோனா தொற்று காரணமாக, எம்.பி.,களுக்கு வழங்கும் நிதியை நிறுத்தி உள்ளது. இந்த ஒன்றிய அரசானது பெண்களின் மாநில உரிமைகளை பறித்து வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான சட்டம், நீட் தேர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். சுற்றுசூழல் அதிகம் பாதிக்கப்படும் போது இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.ஒரு நல்ல ஆட்சி நடைபெற்றால் மட்டுமே பெண்களால் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இருக்க முடியும்.
கலைஞர் ஆட்சிக்காலத்தில் தான் பெண்களுக்கு கல்வி சுய உதவி குழுக்கள் உள்ளாட்சியில், 33 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய அரசு இரண்டு முறை ஆட்சிக்கு வந்தும் இதுவரை பெண்களுக்கான இட ஒதிக்கீடு அதிகம் பெறுவதற்கான சட்டத்தை நிறைவேற்றவிலை. பெண்கள் முன்னேற்றத்துக்காக திமுக தவிர எந்த கட்சியும் செயல்படுத்தவில்லை தற்போது தமிழக முதல்வர் அவர்கள் கிராமப்புற பெண்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார். இதன் காரணமாக ஆண்கள் வீட்டிலிருந்தபடியே பெண்களை வேலைக்கு அனுப்பி வருகின்றனர் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு
ஞாயிறு 19, அக்டோபர் 2025 1:14:38 PM (IST)

தூத்துக்குடியில் தீபாவளி பாதுகாப்பு தீவிரம்: ட்ரோன் கேமரா மூலம் நகர் பகுதிகள் கண்காணிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 11:00:17 AM (IST)

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:56:47 AM (IST)

தூத்துக்குடியில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:04:24 AM (IST)

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கிய விஜய்!
சனி 18, அக்டோபர் 2025 5:29:00 PM (IST)
