» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வருவாய் இழப்பை ஈடுகட்ட பேருந்துகளில் ஆண்களிடம் கூடுதல் கட்டணம்: ஓபிஎஸ் குற்றச்சாட்டு
திங்கள் 2, ஆகஸ்ட் 2021 5:11:14 PM (IST)
மகளிருக்கான இலவசப் பயணத்தால் ஏற்படும் இழப்பு, ஆண்கள் தலையில் சுமத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இந்த அறிவிப்பின்படி, நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், சில பகுதிகளில், பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் பேருந்துகளில், அந்த இழப்பை ஈடுசெய்ய பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களிடம் குறைந்தபட்சக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்றும், இதற்கு முன் 5 ரூபாய் என்பதுதான் குறைந்தபட்சக் கட்டணமாக இருந்தது என்றும், சட்டத்துக்குப் புறம்பாக அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது என்றும், இதுகுறித்து போக்குவரத்துக் கழக நிர்வாகத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது, தவறு சீர்செய்யப்படும் என்று பதில் அளித்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
மேலும், நகர்ப்புறப் பேருந்துகளைவிட புறநகர்ப் பேருந்துகளில் கட்டணம் அதிகம் என்றும், நகர்ப்புறப் பேருந்துகளில் மட்டும்தான் இலவசப் பயணம் அனுமதிக்கப்படுகிறது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர்ப் பேருந்துகளில் 'மகளிர் இலவசம்' என்ற பலகை வைக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும், ஆனால், ஆண்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் என்பதற்குப் பதிலாக 10 ரூபாய் என்று வசூலிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இலவச மகளிர் பயணத்தை அனுமதிக்கும் பேருந்துகள் நகர்ப்புற பேருந்துகள் என்கின்ற போதும், ஆண்களிடம் குறைந்தபட்சக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்றும், இதுபோன்ற விதிமீறல்கள் சர்வ சாதாரணமாக திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ராமச்சேரி, காஞ்சிப்பாடி, திருவாலங்காடு மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழித்தடங்களில் நடைபெறுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
புறநகர்ப் பேருந்துகளில் சாதாரண மற்றும் விரைவுப் பேருந்துகள் என இரு வகைகள் இருக்கின்றன என்றும், விரைவுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், அந்தப் பேருந்துகள் பெரும்பாலும் அனைத்துப் பேருந்து நிறுத்தத்திலும் நிறுத்தப்படுவதாகவும் பயண நேரத்தில் எவ்வித மாற்றமும் இல்லையென்றும், அப்பகுதி மக்கள் தெரிவிப்பதாக, பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதே முறை தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கடைப்பிடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
மகளிருக்கு இலவசப் பயணம் என்று அறிவித்துவிட்டு, அந்த இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கான புதிய உத்திகளை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடைப்பிடிப்பது அரசாணைக்கு எதிரான செயல். இது அரசாங்கத்துக்கு ஆட்சியாளர்களுக்குத் தெரிந்து நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என்று தெரியவில்லை. இதுபோன்ற கட்டண வசூல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மகளிருக்கான இலவசப் பயணத்தால் ஏற்படும் இழப்பு ஆண்கள் தலையில் சுமத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் மாநில பகுஜன் சமாஜ்: புதிய அரசியல் கட்சி தொடங்கினார் ஆம்ஸ்ட்ராங் மனைவி..!!
ஞாயிறு 6, ஜூலை 2025 11:11:26 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து அதிகரிப்பு, விலை குறைந்தது: பொதுமக்கள் மகிழ்ச்சி!!
ஞாயிறு 6, ஜூலை 2025 10:00:11 AM (IST)

திருச்செந்தூர் கோவில் பாதுகாப்பில் 360 டிகிரி கேமரா ஜிபிஎஸ் வாகனங்கள்: ஏடிஜிபி துவக்கி வைத்தார்
சனி 5, ஜூலை 2025 8:00:37 PM (IST)

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்!
சனி 5, ஜூலை 2025 5:15:49 PM (IST)

விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ. 5 இலட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
சனி 5, ஜூலை 2025 4:39:34 PM (IST)
