» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு கேபிள் டிவி நிறுவன சிக்னலை துண்டித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார்!
திங்கள் 2, ஆகஸ்ட் 2021 4:05:22 PM (IST)
திருநெல்வேலியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு கேபிள் டிவி நிறுவன சிக்னலை துண்டித்தவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தனி வட்டாட்சியர் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக திருநெல்வேலி அரசு கேபிள் டிவி நிறுவனம், துணை மேலாளர் / தனி வட்டாட்சியர் ஆதிநாராயணன் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனு: திருநெல்வேலி மற்றும் ஒருங்கிணைந்த தென்காசி மாவட்டம் - தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சிக்னல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் துணை கட்டுப்பாட்டு அறையான பாவூர்சத்திரம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து சிவகாமிபுரம், மருதடியூர், மேட்டூர், பெத்தநாடார்பட்டி ஆகிய பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு சிக்னல் சென்று வருகிறது.
இதனை கடந்த 22.07-2021 அன்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சிக்னல் செல்லும் OFC வயரில் உள்ள Coreகளை (கண்ணாடி இழை) சுமார் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பாவூர்சத்திரம் BSNL அலுவலகம் அருகே மற்றும் அதற்கு பின்புறம் உள்ள பகுதியிலும் துண்டிப்பு செய்துள்ளனர். இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் குறும்பலாபேரி பகுதி உள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர் லோகநாதபாண்டியன் என்பவர் வென்னிமலை முருகன் கோவிலுக்கு கீழ்புறம் ஆர்ச் பக்கத்தில் உள்ள கேபிள் வயர்களை துண்டிப்பு செய்துள்ளதாக சில நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தங்களிடம் புகார் மனு அளித்துள்ளர். இதனால் துண்டிப்பு செய்த நபர்கள் மீது இதற்குண்டான இழப்பீடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுகொள்கிறேன் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்சியில் பொங்கல் விழா: தமிழர் பாரம்பரிய உடையில் அமித் ஷா பங்கேற்பு!
திங்கள் 5, ஜனவரி 2026 5:11:12 PM (IST)

தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடக்கம்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்
திங்கள் 5, ஜனவரி 2026 4:18:09 PM (IST)

அமமுக கைகாட்டுபவர்கள்தான் முதல்வராக வர முடியும் : டிடிவி தினகரன் பேட்டி
திங்கள் 5, ஜனவரி 2026 3:52:29 PM (IST)

மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
திங்கள் 5, ஜனவரி 2026 3:30:46 PM (IST)

இந்தியாவில் ஊழல் நிறைந்த கட்சி, ஆட்சி என்றால் திமுகதான் : அமித் ஷா பேச்சு!
திங்கள் 5, ஜனவரி 2026 11:30:39 AM (IST)

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் சேர 9.14 லட்சம் விண்ணப்பம்: தேர்தல் ஆணையம் தகவல்
திங்கள் 5, ஜனவரி 2026 10:57:45 AM (IST)

