» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்
திங்கள் 2, ஆகஸ்ட் 2021 12:36:07 PM (IST)
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி, சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் இன்று (ஆக. 02) காலை மனு ஒன்றை அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் கமல் கூறும்போது, "கிராம சபைக் கூட்டங்களை நடத்தக் கோரி மனு அளித்துள்ளோம். கடந்த 2020 ஜனவரிக்குப் பின்பு கிராம சபைக் கூட்டம் நடக்கவே இல்லை என்பதுதான் எங்கள் குறை. அதை மாவட்ட ஆட்சியரிடம் மனு மூலம் தெரிவித்துள்ளோம்.
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி, சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கின்றோம். தமிழக நிதிநிலை அறிக்கையில் கிராம சபைகளுக்கு எனத் தனி நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிக்க வேண்டும்" என்றார். அப்போது, கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவில் பஸ்கள் ஓடவில்லை: கோவையில் இருந்து புறப்பட்ட 50 பஸ்கள் எல்லையில் நிறுத்தம்!
புதன் 9, ஜூலை 2025 11:36:56 AM (IST)

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

அதிகாரிகள் கொடுமையால் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை: அன்புமணி குற்றச்சாட்டு
புதன் 9, ஜூலை 2025 10:46:28 AM (IST)

தமிழகத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்!
புதன் 9, ஜூலை 2025 10:35:19 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

திருச்செந்தூர் கோவில் மட்டுமல்ல மாதா கோவில் திருவிழாவாக இருந்தாலும் கடமையை செய்வேன்: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 8:12:52 PM (IST)
