» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கூடங்குளம் அணுசக்தி கழகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி: ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு!

திங்கள் 2, ஆகஸ்ட் 2021 10:12:04 AM (IST)

கூடங்குளத்தில் உள்ள அணுமின் கழகத்தில் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்ககப்பட்டுள்ளது.

இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் கழகத்தில் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ படித்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Trade Apprentices

மொத்த காலியிடங்கள்: 173

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Fitter - 50
2. Mechinist - 25
3. Welder (Gas & Electric) - 08
4. Electrician - 40
5. Electronic Mechanic - 20
6. Pump Operator Cum Mechanic - 05
7.Instrument Mechanic - 20
8. Mechanic (Chiller Plant) Industrial Air Conditioning - 05

தகுதி:   பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 16.08.2021 தேதியின்படி 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ-இல் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். 

பயிற்சி அளிக்கப்படும் இடம்: கூடங்குளம் அணுமின் கழகம்.

பயிற்சி காலம்: 1 ஆண்டு

உதவித்தொகை: சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு ஐடிஐ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.8.,855-ம், ஒரு ஆண்டு  ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.7,700-ம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.apprenticeshipindia.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து அதனை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விரைவு அல்லது பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். விளம்பர எண்.NPCIL/KKNPP/HRM/02/2021 .ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய முகவரி: The Senior Manager(HRM), HR-Recruitment Section, Kudankulam Nuclear Power Project, Kudankulam(PO), Radhapuram Taluk, Tirunelveli District, - 627106


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Thoothukudi Business Directory