» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு 5 நாள்கள் தடை: ஆட்சியர் உத்தரவு
சனி 31, ஜூலை 2021 4:47:47 PM (IST)
திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு இன்று முதல் 5 நாள்களுக்கு அனுமதியில்லை என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருத்தணி முருகன் கோயிலில் ஆகஸ்ட் 31ஆம் தேதி சனிக்கிழமை முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுவதாகவும், கரோனா பரவல் முன்னெச்சரிக்கை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2ஆம் தேதி திங்கள்கிழமை ஆடிக் கிருத்திகை என்பதால், அன்றைய தினம் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஏராளமான பக்தர்கள் திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அன்றைய தினம் லட்சக்கணக்கான மக்கள் திருத்தணி முருகன் கோயிலுக்கு வருகை தருவார்கள் என்பதால், கரோனா தொற்று அதிகம் பரவும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, இன்று முதல் 5 நாள்களுக்கு திருத்தணி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வர அனுமதி மறுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கோயிலில் நடைபெறும் அனைத்து பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் அனைத்தையும் பக்தர்கள், கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக வீட்டிலிருந்தே பார்த்து மகிழலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில் வழக்கு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
ஞாயிறு 2, நவம்பர் 2025 4:27:24 PM (IST)

ராஜராஜ சோழன் சதய விழா: பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான அபிஷேகம்
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:40:47 AM (IST)

கோவில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி: பெற்றோர் வீட்டில் தனியாக விட்டுச்சென்றதால் பரிதாபம்!!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:37:50 AM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

கண்ணகி நகரில் ரூ.40 லட்சம் மதிப்பில் கபடி மைதானம்: துணை முதல்வர் உதயநிதி ஆய்வு!
சனி 1, நவம்பர் 2025 5:25:31 PM (IST)

தமிழகத்தில் ஆளுநர் ரவியை தவிர வேறு எந்த பிஹாரிக்கும் பிரச்சினை இல்லை: துரை வைகோ
சனி 1, நவம்பர் 2025 4:56:34 PM (IST)


.gif)