» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசுப்பணிகளில் தமிழ்நாட்டினருக்கு முன்னுரிமை; 15 நாள்களில் ஸ்மார்ட் கார்ட்: ஆளுநர் உரை!!

திங்கள் 21, ஜூன் 2021 11:23:37 AM (IST)

தமிழகத்தில் அரசுப்பணிகளில் தமிழ்நாட்டினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும், விண்ணப்பித்த 15 நாள்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. சென்னை கலைவாணா் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள அரங்கில் காலை 10 மணிக்குக் கூட்டம் தொடங்கியது. சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு நடைபெறும் புதிய பேரவையின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கிவைத்துள்ளார்.

ஆளுநர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணிகளில் முன்னுரிமை

தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை

மாவட்டம் தோறும் பணிபுரியும் மகளிர்களுக்கான தங்கும் விடுதிகள்.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி

இலக்குகளை விரைவாக எட்டுவதற்கு தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட "முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு" அமைத்தல்

திருப்பெரும்புதூர் முதல் ஒசூர் வரை சென்னை பெங்களூரு மேம்படுத்தப்பட்ட தொழில் பெருவழி.

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க நிபுணர் குழு.

கோயில் நிதி, நிலங்கள் மற்றும் சொத்துக்களின் தணிக்கை செயல்முறைகளை நெறிப்படுத்துதல்.

பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த ஒரு உயர்மட்டஆலோசனைக் குழு மீண்டும் அமைத்தல்.

சென்னை மாநகரத்தின் கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்த "சிங்காரச் சென்னை 2.0 " எனும் புதிய திட்டம்.

புதிய பொலிவுடன் "உழவர் சந்தைகள்"

மாநிலம் முழுவதும் மீண்டும் நிறுவுதல். விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக கிராமப்புற சந்தைகள் உருவாக்குதல்,

மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுதல். 

வேளாண்மைக்கென்று தனியாக ஒரு நிதிநிலை அறிக்கை ஆண்டுதோறும் தாக்கல் செய்தல்,

வெள்ள நீர் அபாயத்தை கட்டுப்படுத்த வல்லுநர்கள் கொண்ட சென்னை பெருநகர வெள்ள நீர் மேலாண்மைக் குழு

தொழில் நிறுவனங்களில் பணியாளர்களால் செலுத்தப்படும் தொழில்வரியை செலுத்த 2 மாத கால அவசாகம் வழங்கப்படும்.

மாநிலத்தில் உள்ள அனைத்து மின்நுகர்வோருக்கும் தடையின்றி மின்சாரம் வழங்குவதே அரசின் நோக்கம்.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் 

விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory