» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக டாக்டர் ஜெ.யூ.சந்திரகலா நியமனம்

திங்கள் 14, ஜூன் 2021 10:46:10 AM (IST)

தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன், பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக ஜெ.யூ.சந்திரகலா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து 45 ஐஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், தென்காசி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த டாக்டர் ஜி.எஸ்.சமீரன் கோவை மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக டாக்டர் ஜெ. யூ சந்திரகலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர் ஜெ.யூ.சந்திரகலா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் இவர் 2013ம் ஆண்டு தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் ஏற்கனவே திருப்பத்தூரில் உதவி ஆட்சியராக பணிபுரிந்துள்ளார், மேலும்  மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றில் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குனராக பொறுப்பு வகித்து வந்த டாக்டர் ஜெ.யூ. சந்திரகலா தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டாக்டர் ஜெ.யூ.சந்திரகலா தென்காசி மாவட்டத்தின் மூன்றாவது ஆட்சியர் மட்டுமன்றி, தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியரும் இவர்தான்.மேலும் தென்காசி புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர் ஜெ.யூ.சந்திரகலா தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது ஆட்சியராக பணிபுரிந்து வரும் டாக்டர் கே.செந்தில்ராஜன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory