» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

சனி 5, ஜூன் 2021 12:17:50 PM (IST)

ஊரடங்கு வரும் 7-ஆம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில், தமிழகத்தில் 14-ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டுனம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று அதிகமாக உள்ளதால் சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

தளர்வுகள்:

1. தனியாக செயல்படுகின்ற காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை திறக்க அனுமதி.

2. காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி.

3. மீன் சந்தைகள், இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

4. சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்கள் மட்டும் கொடுத்து பத்திரப்பதிவு செய்ய அனுமதி.

5. தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

6. அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

7. தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், வீடு மற்றும் அலுவலக பராமரிப்பு சேவைகளுக்கு அனுமதி.

8. மின் பணியாளர்கள், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரம் பழுது நீக்குபவர்கள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை இ-பதிவுடன் செயல்பட அனுமதி.

9. மின் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட அனுமதி.

10. இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள் இயக்க அனுமதி.

11. ஹார்டுவேர், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட அனுமதி.

12. புத்தக கடைகள் செயல்பட அனுமதி.

சலூன், தேநீர் கடைகளுக்கு அனுமதி இல்லை

தமிழகத்தில் ஜூன் 14ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சலூன் மற்றும் தேநீர் கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.


மக்கள் கருத்து

மோகன்தாஸ்Jun 6, 2021 - 03:46:18 PM | Posted IP 162.1*****

இரு சக்கர வாகனத்தில் பணிக்கு செல்லலாமா அல்லது கார் பணியாளர் பேருந்துலதான் போகனுமா இ பாஸ் வாங்கனுமா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory